தனது வெற்றியை விமர்சித்தவர்களுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் பதிலடி / BIGGBOSS 6 TAMIL WINNER AZEEM GIVES REPLY TO HIS HATERS

0
553

BIGGBOSS 6 TAMIL WINNER AZEEM

தனது வெற்றியை விமர்சித்தவர்களுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் பதிலடி / BIGG BOSS 6 TAMIL WINNER AZEEM GIVES REPLY TO HIS HATERS:  எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் சினிமா தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரம் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி இறுதியாக ஷிவின், அசீம், விக்ரமன் ஆகிய மூன்று பேரும் இறுதிப்போட்டியில் நுழைந்தனர்.

இதில் விக்கிரமன் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் வென்றார்.

இவருக்கு 50 லட்சம் பரிசு மற்றும் ஒரு காரும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் ஒரு சிலர் இவரின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அசீம் ஒரு வாரம் கழித்து தற்போது வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
எம் மக்களுக்கு வணக்கம்🙏🏻
சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம்.
நம்மை நோக்கி சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்கள் தானே தவிர நம்மை தாக்கும் கற்கள் அல்ல. அதை படிக்கல்லாக பயன்படுத்தி நம் இலக்கை அடைவோம்.நாம் செய்யப்போகும் நற்செயல்கள் பல !! 
நன்றி🙏🏻