வாரிசு படத்தின் புது வீடியோ பாடல் வெளியீடு / VARISU VIDEO SONG JIMMIKKI PONNU RELEASED IN YOUTUBE

0
441

VARISU VIDEO SONG JIMMIKKI PONNU RELEASED IN YOUTUBE

வாரிசு படத்தின் புது வீடியோ பாடல் வெளியீடு / VARISU VIDEO SONG JIMMIKKI PONNU RELEASED IN YOUTUBE: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் சினிமா தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய படம் “வாரிசு”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார்.

அதோடு பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இந்த படம் சென்ற 11ம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியது.
அதன்பின் இப்படத்தின் தெலுங்கு பதிப்பான “வாரசுடு” கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று பார்வையாளர்களை குவித்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஜிமிக்கி பொண்ணு என்ற வீடியோ பாடலை படக் குழு வெளியிட்டு உள்ளது. தற்போது இந்த பாடலை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
வாரிசு திரைப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூபாய்.250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.