Vijay Anna With Shobha Amma 2023: வதந்திக்கு வந்தது முற்றுப்புள்ளி வைத்த விஜய் – தாய் ஷோபாவுடன் ஃபோட்டோ வெளியானது

1
423
Vijay Anna With Shobha Amma
Vijay Anna With Shobha Amma

Vijay Anna With Shobha Amma: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் வதந்திக்கு வந்தது முற்றுப்புள்ளி வைத்த விஜய் – தாய் ஷோபாவுடன் ஃபோட்டோ வெளியானது தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

விஜய் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது படங்களுக்கு மிகப்பெரிய வியாபாரம் நடந்துகொண்டிருக்கிறது. இதனால் அவரது படங்களை நம்பி பல தயாரிப்பாளர்கள் கோடிகளை கொட்ட தயாராக இருக்கின்றனர்.

To Download Samacheer School Books PDF

கடைசியாக வம்சி இயக்கத்தில் அவர் நடித்த வாரிசு படமும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் முழுவதும் வசூலித்ததாக கூறப்பட்டது.

லியோ

Vijay Anna With Shobha Amma: வாரிசு படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டாலும் அந்தப் படம் மோசமான விமர்சனங்களையே சந்தித்தது. இதனையடுத்து எப்படியாவது ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். காஷ்மீரில் சமீபத்தில் ஷூட்டிங் முடிந்து இப்போது சென்னை பையனூரில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவருகிறது.

வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் சர்ச்சை

Vijay Anna With Shobha Amma: இதற்கிடையே வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அரங்கத்துக்குள் வந்த விஜய் அனைவரையும் கட்டி அணைத்தும், கை கொடுத்தபடியும் இருந்தார்.

ஆனால் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபாவிடம் சிறிது அலட்சியத்துடன் நடந்துகொண்டதாக சர்ச்சை எழுந்தது. மேலும் தன்னை வளர்த்துவிட்டவர்களை விஜய் இப்படி அலட்சியப்படுத்தியிருக்கக்கூடாது என்றும் விமர்சனம் வைக்கப்பட்டது.

Vijay Anna With Shobha Amma
Vijay Anna With Shobha Amma

ஷோபா மறுப்பு

Vijay Anna With Shobha Amma: ஆனால் இந்த விமர்சனத்துக்கு மறுப்பு தெரிவித்த விஜய்யின் தாய் ஷோபா, அது விஜய்யின் ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட விழா. அங்கு விஜய் எங்களை கவனிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எதிர்பார்க்கவும் கூடாது. அவரது வேலையெல்லாம் அவர் ரசிகர்களை கவனிப்பதுதான். வாரிசு படத்தைக்கூட நான், விஜய், என் கணவர் மூன்று பேரும் ஒன்றாகத்தான் பார்த்தோம் என கூறியிருந்தார்.

Vijay Anna With Shobha Amma
Vijay Anna With Shobha Amma

தாயுடன் புகைப்படம்

இந்நிலையில் நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுடன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீ போல் பரவிவருகிறது.

Vijay Anna With Shobha Amma
Vijay Anna With Shobha Amma

அந்தப் புகைப்படத்தில் லியோ கெட் அப்பில் இருக்கும் விஜய் சிகப்பு நிற சட்டையுடன் ஷோபாவின் கீழ் அமர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படமானது எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபாவின் 50ஆவது திருமண நாளை ஒட்டி எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் அவரது பெற்றோருடன் பேசுவதில்லை, நேரில் சந்திப்பதில்லை என்பது வெறும் வதந்திகள்தான் என்பதை இந்த புகைப்படம் நிரூபித்துவிட்டதாகவும், தன்னை வளர்த்துவிட்டவர்களை குறிப்பாக தனது பெற்றோரை விஜய் மதிக்காமல் இருக்கமாட்டார் என உற்சாகத்துடன் கமெண்ட் செய்துவருகின்றனர். இப்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.