கீர்த்தி சுரேஷிற்கு விஜய் உடன் திருமணமா? தாயார் கொடுத்த விளக்கம் / KEERTHI SURESH MARRIED TO ACTOR VIJAY?

0
569

KEERTHI SURESH MARRIED TO ACTOR VIJAY?

கீர்த்தி சுரேஷிற்கு விஜய் உடன் திருமணமா? தாயார் கொடுத்த விளக்கம் / KEERTHI SURESH MARRIED TO ACTOR VIJAY?: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் சினிமா தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே அவருடைய திருமணம் குறித்த வதந்தி தகவலும் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதுமட்டுமின்றி 13-ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், அவர் காதலிக்கும் நபர் தற்போது கேரளாவில் ரிசார்ட் உரிமையாளராக இருப்பதாகவும் தீயாக தகவல்கள் பரவியது.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்தி தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருடைய தாயார் மேனகா சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா ” என்னுடைய மகள் திருமணம் குறித்து பரவும் எந்த செய்தியும் உண்மை இல்லை.
இது வெறும் வதந்தி தகவல் தான். இந்த மாதிரி வைரலாகும் வதந்தி செய்திகளை பார்க்கக் கூட நாங்க விரும்பறதில்லை. மேற்கொண்டு இது தொடரபா பேசுவதற்கு எதுவுமே இல்லை” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.