THALAPATHY 68 HIDDEN DETAILS 2023: தளபதி 68 போஸ்டரில் மறைக்கப்பட்ட விவரங்கள், நீங்க கவனிச்சீங்களா?

0
382
THALAPATHY 68 HIDDEN DETAILS
THALAPATHY 68 HIDDEN DETAILS

THALAPATHY 68 HIDDEN DETAILS 2023: தளபதி 68 போஸ்டரில் மறைக்கப்பட்ட விவரங்கள், நீங்க கவனிச்சீங்களா?: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது தளபதி 68 படத்தின் ஒரு மாபெரும் அப்டேட்.

தளபதி 68

THALAPATHY 68 HIDDEN DETAILS 2023: தளபதி 68 போஸ்டரில் மறைக்கப்பட்ட விவரங்கள், நீங்க கவனிச்சீங்களா?: ஏற்கனவே விஜயின் 68 வது படத்தை இயக்கப்போவது அட்லீயா? லோகேஷ் கனகராஜா? அல்லது நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தின் இயக்குநர் கோபி சந்த் மலினேனியா? என மிகவும் அரசல் புரசலாக பல செய்திகள் வந்துகொண்டே இருந்தன.

THALAPATHY 68 HIDDEN DETAILS
THALAPATHY 68 HIDDEN DETAILS

இந்த நிலையில் நேற்று அறிவிப்பு வெளியிட்டு இன்று இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இயக்கத்தில் தமிழ் திரையுலகின் வாரிசான விஜய் நடிப்பில் தான் தங்களது அடுத்த படம் என வெளியிட்டு இருந்தனர் AGS நிறுவனம். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும், அதிர்ச்சியையும் கொடுத்தது.

Vijay Anna With Shobha Amma 2023: வதந்திக்கு வந்தது முற்றுப்புள்ளி வைத்த விஜய் – தாய் ஷோபாவுடன் ஃபோட்டோ வெளியானது

கடந்த இரு ஆண்டுகளில் வெளியான விஜய்யின் இரு படங்களான பீஸ்ட் மற்றும் வாரிசு, கலவையான விமர்சனங்களையே பெற்றது, இருப்பினும் அவை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்தது.

கடந்த சில ஆண்டுகளில் வெற்றி படங்களை மட்டுமே கொடுத்த விஜய்க்கு இந்த இரு படங்களும் ஒரு கதை தேர்வு குறித்து ஒரு சிறிய பாடத்தை கற்று கொடுத்தது என ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சு வலம் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் தான் விஜயின் அடுத்த படம் வெளியாகும் எனவும் அது தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக பெரிதும் வாய்ப்பு உள்ளது எனவும் பேச்சுகள் வந்துக்கொண்டு இருந்தன.

அது சற்று ஓய்ந்திருந்த நேரத்தில் திடீரென யாரும் எதிர்பாரா நேரத்தில் AGS நிறுவனத்திடமிருந்து ‘தளபதி 68 படத்தின் UPDATE நாளை வெளியாகும்’ என அறிவிப்பு வந்து, இன்று அதன் ANNOUNCEMENT POSTER வெளியானது.

THALAPATHY 68 HIDDEN DETAILS
THALAPATHY 68 HIDDEN DETAILS

HIDDEN DETAILS

THALAPATHY 68 HIDDEN DETAILS 2023: தளபதி 68 போஸ்டரில் மறைக்கப்பட்ட விவரங்கள், நீங்க கவனிச்சீங்களா?: அதில் சில நுணுக்கமான விஷயங்களும் சில HIDDEN DETAILSம் உள்ளன. அவை என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதல் FRAMEலேயே முற்கால டோனில் ஒரு COUNTDOWN ஓடும், அது இந்த படத்தின் கதைக்களம் 1990களில் கதைகளமாக இருக்கலாம் எனும் ஒரு என்னத்தை எழுப்புகிறது.

மேலும் அடுத்த FRAMEல் இடது பக்கத்தில் ஒரு கடிகாரம் தலைகீழாக உள்ளது, மேலும் அந்த செய்தித்தாளில் பழைய குடோன்கள், ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.

வலது பக்கத்தில் ஒரு பூதக்கண்ணாடி உள்ளது. இதை வைத்து பார்க்கையில் ஒரு கொலை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ஒரு கும்பல் அல்லது அதை பற்றிய ஒரு வழக்கை விசாரிக்கும் ஒரு DETECTIVE வாக இருக்கலாம்.

மேலும் இந்த செய்திதாள்கள், வலது புறத்தில் இருக்கும் நாளிதழ்களை வைத்து பார்க்கையில் இந்த கதைக்களம், மேலை நாடுகளில் நடப்பது போல் தென்படுகிறது.

அந்த மனிதர் வைத்திருக்கும் பேனாவில் இருக்கும் இரு ‘V’ வார்த்தைகள், இதை V2 (V Square) என்றும் எடுத்துக் கொள்ளலாம், ஏனெனில் இதன் இயக்குநர் மற்றும் கதாநாயகரின் பெயர்கள் V எழுத்தில் ஆரம்பிப்பதால், அதனை வைத்து இருக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக அந்த செய்திதாளின் மத்தியில் ஒரு ஒரு WORD PUZZLE உள்ளது, அதில் தான் முக்கியமான மரமங்கள் வெளிப்படுகின்றன.

THALAPATHY 68 HIDDEN DETAILS
THALAPATHY 68 HIDDEN DETAILS

அந்த PUZZLEன் முதல் வரியிலேயே BETTY WHITE எனும் ஒரு பெயர் இருக்கிறது, இது யார் என பார்க்கையில் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்க தொலைக்காட்சி பார்வையாளர்களை சிரிக்க வைத்து தனது 99 வது வயதில், 100வது பிறந்த நாளுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாக ஸ்ட்ரோக் காரணமாக காலமான பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நடிகையாவார்.

இதில் மேலும் சிந்திக்க கூடியதாக என்ன இருக்கிறது என்றால், ‘AFTER SIZZLING APRIL, TEMPERATURES IN MAY TO BE HIGH IN NORTH, WEST’ எனும் தலைப்பு தான். இது இரண்டையும் வைத்து பார்க்கையில் அதீத வெயிலின் காரணமாக இறந்து இருக்கலாம் அல்லது மர்மமான முறையில் இறந்த அந்த நபரின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஒரு DETECTIVE கதைக்களமாக கூட இது இருக்கலாம் என தோன்றுகிறது.

அடுத்ததாக, 7வது வரியில் தெலுங்கு நட்சத்திரம் NTR பெயர் உள்ளது, இந்த படத்தில் NTR ஒரு GUEST ROLEல் நடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் தளபதி எனும் வார்த்தையும், வெங்கட் பிரபு எனும் வார்த்தையும் ‘A’ எனும் ஒற்றை எழுத்தில் ஒன்றிணைக்கிறது, விஜய்யின் பெயர் இதில் ‘A’வில் ஆரம்பிப்பதாக கூட இருக்கலாம்.

தற்பொழுது தங்களுக்கென தனி UNIVERSE படைத்து வரும் இயக்குநர்கள் மத்தியில் தனது சீரியஸ் படங்களான மங்காத்தா மற்றும் மாநாடு படங்களை இந்த படத்தை ஒன்றினைப்பாரா எனும் கேள்வி நம்மிடையே எழுகிறது. இருப்பினும் வித்தியாசமான கதைக்களம் போல் தெரியும் இந்த தளபதி 68 ‘A VENKAT PRABHU PUZZLE ‘ என எடுத்துக்கொள்ளலாம்.

THALAPATHY 68 ANNOUNCEMENT VIDEO