THALAPATHY 68 DIRECTOR: தளபதி 68ஐ வெங்கட் பிரபுதான் இயக்கப்போகிறாரா?

2
388
THALAPATHY 68 DIRECTOR
THALAPATHY 68 DIRECTOR

THALAPATHY 68 DIRECTOR: வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் வாரிசு, அதிக வசூலை குவித்து குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்தது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்வ் விஜய். இந்த படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் லியோ

THALAPATHY 68 DIRECTOR: படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் லியோ படத்தில் நடித்து வருகின்றனர்.
வரும் அக். 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் கடந்த திரைப்படமான ‘விக்ரம்’ பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால், லியோ படத்தையும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.
லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. லியோ படத்தில் படப்பிடிப்பு விரைவில் முழுவதுமாக நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில், தற்போது தளபதி 68 படம் குறித்த பேச்சுகளும் எழத்தொடங்கிவிட்டன.
THALAPATHY 68 DIRECTOR
THALAPATHY 68 DIRECTOR

68ஆவது படம் யாருடன்?

THALAPATHY 68 DIRECTOR: வாரிசு திரைப்படத்தை போலவே விஜய் அடுத்து தெலுங்கு இயக்குநர் ஒருவருடன் இணைய உள்ளார் என முன்னர் தகவல் வெளியான நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
விஜய் தனது 68ஆவது படத்தை சன் பிக்சர்ஸ், சூப்பர் குட் பிலிம்ஸ் அல்லது தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
அந்த வகையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும், அதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிறந்தநாளுக்கு அறிவிப்பு?

THALAPATHY 68 DIRECTOR: வெங்கட் பிரபு, விஜய்யிடம் கதையை கூறி ஓகே வாங்கிவிட்டதாகவும், இளைஞர்கள் விரும்பும் வகையில் மாஸ் ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக இதன் திரைக்கதை அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாளான வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான கதை, திரைக்கதைக்கு பெயர் போன வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள கஸ்டடி படம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது.
இருப்பினும், இந்த படத்திற்கு முன் சிம்புவை வைத்து இவர் எடுத்த ‘மாநாடு’ திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்து, வெங்கட் பிரபுவுக்கு உச்சபட்ச புகழை பெற்றுத் தந்தது எனலாம்.
THALAPATHY 68 DIRECTOR
THALAPATHY 68 DIRECTOR

அப்போ மங்காத்தா 2?

THALAPATHY 68 DIRECTOR: நடிகர் அஜித்தின் 50ஆவது படமான மங்காத்தாவை வெங்கட் பிரபு இயக்கி, அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பிறகு பலமுறை வெங்கட் பிரபு விஜயை வைத்து படம் எடுப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போதாவது அந்த கனவு நிறைவேறுமா என்ற எண்ணமும் ரசிகர்களின் மனதில் எழுந்துள்ளது.
வெங்கட் பிரபு மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில், விஜய்யின் 68ஆவது படத்தை அவர் இயக்க வாய்ப்பிருப்பதாக வெளியாகியுள்ள தற்போதைய தகவல் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.