MICROSOFT BING BROWSER WITH CHATGPT: ChatGPT-யை அடிப்படையாக கொண்டு புதிய மைக்ரோசாப்ட் பிங் ப்ரெளசர்

0
400
MICROSOFT BING BROWSER WITH CHATGPT

 

MICROSOFT BING BROWSER WITH CHATGPT: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் MICROSOFT BING BROWSER WITH CHATG தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த சாட்ஜிபிடி அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை பெற்றது. இதனையடுத்து சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பார்டு (Bard) என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை விரைவில் கொண்டுவர இருக்கிறது.

MICROSOFT BING BROWSER WITH CHATGPT

இந்நிலையில் ஓப்பன் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய பிங் ப்ரெளசரை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ப்ரெளசர் சாட்ஜிபிடியை விட மிக திறன் வாய்ந்ததாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் மற்றும் எட்ஜ் என்ற இரண்டு ப்ரெளசர்களை வைத்துள்ளது. இந்த இரண்டு ப்ரெளசர்களையும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் மீள் உருவாக்கம் செய்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

தகவல்களை தேடுவதில் புதிய புரட்சியாக இந்த மீள் உருவாக்கம் இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. இந்த பிங் ப்ரெளசரில் சாட் வசதியும் உள்ளது.