12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன் 01/01/2024 முதல் 07/01/2024 வரை

0
343
12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன் 01/01/2024 முதல் 07/01/2024 வரை
12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன் 01/01/2024 முதல் 07/01/2024 வரை
1. மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆலோசித்து செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். புதிதாக எந்த முயற்சிகளையும் எடுக்காமல் தள்ளி வைப்பது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலை செய்யும் பொழுது வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் கண்டிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது.
எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக நன்றாக ஆலசித்து எடுப்பதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.
2. ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு கிடைக்கும்.
ஒரு சிலருக்கு எதிர் பாராத பண வரவும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் முயற்சியை செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சாதாரணமாக தான் இருக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாகவே இருக்கும்.
எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பாக தக்க ஆலோசனை செய்து எடுப்பது நன்மையை தரும். முடிந்த அளவிற்கு முடிவுகள் எடுப்பதை தள்ளி வைப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
3. மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சாதகமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு விரும்பிய சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.
தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
4. கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.
வேலையை பொருத்தவரை வரை சாதாரணமாக இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை மேலும் முன்னேற்றுவதற்கு முயற்சி செய்து அதில் வெற்றியும் அடைவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
5. சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கையாள வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட பணவரவு அதிகரிக்கும்.
திடீர் செலவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் இணைந்து பணியாற்றுவது நன்மையை தரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
உடன் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலமே நல்ல பலன் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
6. கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சமயோகிதமாக செயல்பட்டு வெற்றி அடையக்கூடிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படும்.
உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிறரிடம் பேசும் பொழுது எச்சரிக்கையாக பேசுவது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தொல்லைகள் அனைத்தும் நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
7. விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிக அளவு பணவரவு ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையிடுவதால் ஒரு சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை கடின உழைப்பால் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை பெறுவீர்கள்.
அதனால் தொழிலை முன்னேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
8. தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரம் திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை தென்படுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பிய சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாத அளவிற்கு பார்த்துக் கொள்ள கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
தொழிலை விரிவு படுத்துவதற்காக எந்தவித புதிய முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
9. மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும் செலவுகள் அதிகமாக ஏற்படும் சூழ்நிலையும் உண்டாகும்.
முடிந்த அளவுக்கு கடன் வாங்காமல் இருப்பது நன்மை தரும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
10. கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்தி கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது.
உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பெரிய பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
11. மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும்.
உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் வேலையை செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாசலபெருமாளை வழிபட வேண்டும்.
12. துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த பண வரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். யாரையும் நம்பி எந்த வேலையும் ஒப்படைக்காமல் தானே செய்வது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.
கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை முற்றிலும் தவிர்ப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பழனி ஆண்டவரை வழிபட வேண்டும்.