KADI JOKES IN TAMIL 2023: தமிழில் கடி ஜோக்ஸ்

1
688
KADI JOKES IN TAMIL
KADI JOKES IN TAMIL
KADI JOKES IN TAMIL: சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை எனலாம். நகைச்சுவை மன இறுக்கம் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மன நிலையைப் பேண உதவும்.
நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை, ஒருவராலோ அல்லது குழுவினராலோ மேற்கொள்ளப்படும் சொல், செயல், காட்சி, நினைவூட்டல் மூலம் நகைச்சுவை உணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைப் பெருக்குகிறது.
நகைச்சுவை ஆற்றலை குழந்தைகள் பெற்றொரிடமிருந்து பிறந்த 16 மாதங்களிலேயே கற்றுக் கொள்கின்றனர்.
நகைச்சுவையில், நகைச்சுவைகள் மற்றும் கதைகள் பெரும்பாலும் நகைச்சுவையான விளைவை உருவாக்க நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை உச்சநிலைக்கு எடுத்துச் சென்று தன்னுடைய பேச்சு வழக்குகளில் சிரிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
KADI JOKES IN TAMIL: நகைச்சுவை நடிகர்கள் தங்களை, மற்றவர்களை அல்லது ஒட்டுமொத்த சமுதாயத்தை கேலி செய்யலாம், அது மற்றவர்களின் மனதை புண்படுத்தா வண்ணம் நகைச்சுவைகளை வழங்குதல் அவசியம் ஆகும்.
நகைச்சுவை நடிகர்கள் தற்போதைய நிகழ்வுகள் அல்லது சமூகப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்க நையாண்டி, கேலிக்கூத்து அல்லது பகடி போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
நகைச்சுவையானது ஸ்டாண்ட்-அப் காமெடி முதல் ஸ்கெட்ச் நகைச்சுவை, சிட்காம்கள், திரைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்கள் வரை பல வடிவங்களை எடுக்கலாம்.
ஒவ்வொரு வடிவமும் நகைச்சுவைக்கான தனித்துவமான பாணியையும் அணுகுமுறையையும் கொண்டுள்ளது, ஆனால் அவை அனைத்தும் மக்களை சிரிக்க வைக்கும் அதே நோக்கத்தை பகிர்ந்து கொள்கின்றன.
நகைச்சுவை என்பது நகைச்சுவைகளைச் சொல்லி சிரிக்க வைப்பது மட்டுமல்ல. இது சமூக வர்ணனைக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாகவும் இருக்கலாம், சமூக விதிமுறைகள் மற்றும் நடத்தைகளை ஆராய்ந்து விமர்சிக்க ஒரு வழியை வழங்குகிறது.
நகைச்சுவையாளர்கள் தங்கள் தளத்தைப் பயன்படுத்தி முக்கியமான சிக்கல்களைத் தீர்க்கவும், நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் உரையாடல்களைத் தூண்டவும் முடியும்.
KADI JOKES IN TAMIL
KADI JOKES IN TAMIL

Table of Contents

KADI JOKES IN TAMIL – ஜோக் – 1
அப்பா : மகளே, முன்னாடி நீ என்னை அப்பானு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே.. ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற?
மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலஞ்சிடும் டாடி அதான்.
அப்பா : ???
ஜோக் – 2
மகன் : அப்பா எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!
அப்பா : அது என்னடா தெய்வீகக் காதல்?
மகன் : என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!
ஜோக் – 3
தந்தை : டேய்! எப்பவுமே நம்மளைவிட வயசுல பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கணும் புரியுதா?
மகன் : ஏம்பா அப்படின அம்மா உங்களைவிட வயசுல பெரியவங்களா?
தந்தை : ???
ஜோக் – 4
அப்பா : ஏண்டா பார்முலா-லாம் விரல்ல எழுதி வச்சுருக்க.
மகன் : எங்க ஆசிரியர் தான் சொன்னாங்க பார்முலா-லாம் ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு.
அப்பா : ???
ஜோக் – 5
KADI JOKES IN TAMIL: அப்பா : ஆண்டவன் கிட்ட எனக்கு நல்ல புத்தியக் கொடுன்னு வேண்டிகடா.
பையன் : ஆண்டவா! எங்கப்பாவுக்கு நல்ல புத்தியக்கொடு.
ஜோக் – 6
மாமனார் : மாப்பிள்ளைக்கு காது கேக்காதுங்கற விஷயம் தலை தீபாவளி அன்னிக்குத்தான் தெரிஞ்சது!
அத்தை : எப்படி?
மாமனார் : இந்த வருஷம் தீபாவளிக்கு ஏன் யாருமே பட்டாசு வெடிக்கலைன்னு கேட்டாரு!
ஜோக் – 7
மகள் : Valentine’s Day அப்படினா என்னம்மா?
அம்மா : எதுக்கு நீ கேக்குற?
மகள் : காலையில அப்பா யாருக்கோ போன் பண்ணி Valentine’s Day வாழ்த்துகள்-னு சொன்னாரே.
ஜோக் – 8
அப்பா: உலகத்துலயே காசுதாண்டா முக்கியம் காசு இல்லன்னா எதையுமே வாங்க முடியாதுடா.
மகன்: ஏன் கடன் வாங்கலாமே!
ஜோக் – 9
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
ஜோக் – 10
KADI JOKES IN TAMIL: ஒருவர் : டேம்ல வேலை பார்க்கிறவரோட பெண்ணைக் கட்டினது பெரிய வம்பாப் போச்சுன்னு சொல்றீயே ஏன்?
மற்றவர் : தினமும் ஐந்தாறு கன அடி கண்ணீர் விடுறா?
ஒருவர் : ???
KADI JOKES IN TAMIL
KADI JOKES IN TAMIL
ஜோக் – 11
ஆசிரியர் : கோழி ஏன் முட்டை போடுது???
மாணவன் : ஏன்னா அதுக்கு 1,2,3 போடாத்தெரியாது சார் அதான்.
ஜோக் – 12
ஒருவன் ; தண்ணியில் இருந்து ஏன் மின்சாரம் எடுக்குறாங்க?
மற்றொருவன் : அப்படி எடுக்கல்லன்னா குளிக்கும்போது ஷாக் அடிச்சிரும்ல அதான்.
ஜோக் – 13
ஜோதிடர் : ஐயா உங்க ராசிப்படி இப்போ கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும் ஒரு ஆறு மாதம் பல்லை கடிச்சிட்டு பொறுத்துக்கோங்க அதுக்கப்புறம் கொட்டோ கொட்டுனு கொட்ட போவுது
நபர் : என்னது ஐயா கோட்ட போவுது பல்லா?
ஜோக் – 14
நபர் : ஐயா வாழைப்பழம் ஏன்னா விலை?
கடைக்காரர் : ஒரு ரூபா சார்
நபர் : 60 பைசாவுக்கு தர மாட்டீங்களா??
கடைக்காரர் : ம்ம் 60 பைசாவுக்கு வெறும் தோல் மட்டும் தான் கிடைக்கும்.
நபர் : அப்போ இந்த 40 பைசா பழத்தை கொடு தொலை நீயே வச்சிக்க
ஜோக் – 15
KADI JOKES IN TAMIL: மாணவன் : ம்ம் அம்மா ( அழுத்துக்கொண்டே வீட்டிற்கு வருகிறான் ).
அப்பா : ஏலே மாறா ஏன் அழுவுறா???
மாணவன் : அப்பா ஸ்கூல்ல ராமு அடிச்சிட்டான்பா
அப்பா : வாதியார்கிட்டே சொல்லவேண்டியதுதானே
மாணவன் : அப்பா ராமுங்கிறதே வாத்தியார்தான்பா
ஜோக் – 16
ஒருத்தன் வேகமா வண்டியில போனானாம். ஆனால் தீடிர்னு பிரேக் போட்டானான்.
ஏன்??
ஏன்னா அவன் வீடு வந்துருச்சாம் அதான் பிரேக் போட்டாணாம்.
ஜோக் – 17
கீழே விழுந்தாலும் காயமடையாதது எது?
மழை
ஜோக் – 18
டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
இருவரும் அடிக்கடி மாற வேண்டும்
ஜோக் – 19
நண்பர் 1 : உங்கள் குழந்தை உங்களைப் போலவே இருக்கிறது.
நண்பர் 2 : உஷ் உஷ்.. சத்தமாக சொல்லாதீர்கள். அது பக்கத்து வீட்டுப் பெண்ணின் குழந்தை.
ஜோக் – 20
KADI JOKES IN TAMIL: எந்த வில்லை கட்ட முடியாது?
வானவில்
KADI JOKES IN TAMIL
KADI JOKES IN TAMIL
ஜோக் – 21
கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
ஆட்டு இறைச்சி
ஜோக் – 22
ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்?
ஈரமாகும்
ஜோக் – 23
ஆசிரியர்: “ABCD” இல் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?
மாணவர்: 4
ஆசிரியர்: “ABCD” மட்டும் அல்ல, முழுமையான தொகுப்பைக் கூறினேன்.
மாணவர்: 52
ஆசிரியர்: என்ன?! எப்படி?
மாணவர்: சிறிய எழுத்து 26 மற்றும் பெரிய எழுத்து 26
ஜோக் – 24
ஒருத்தர் அவரோட Driving Licenseஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்?
ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்.
ஜோக் – 25
KADI JOKES IN TAMIL: தண்ணி ல இருந்து ஏன் கரண்டு(Current) எடுக்கறாங்க ஏன்?
ஏன்னா Currentல இருந்து தண்ணிய எடுக்க முடியாது அதான்.
ஜோக் – 26
லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம்.
ஜோக் – 27
ரொம்ப நீளமான Music Instrument எது?
புல்லாகுழல்
ஜோக் – 28
ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்?
ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.
ஜோக் – 29
The Hindu Paper ரொம்ப Weightஆ இருக்கு என்?
ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.
ஜோக் – 30
KADI JOKES IN TAMIL: Costlyஆன கிழமை எது?
“வெள்ளி” கிழமை
KADI JOKES IN TAMIL
KADI JOKES IN TAMIL
ஜோக் – 31
எலிய என்ன பண்ண யானை ஆகலாம்?
எலிக்கு ஒரு பேண்ட் (Pant) போட்டால் எலிபெண்ட்(Elephant) ஆகிடும்.
ஜோக் – 32
“தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்
மாசம் தான் வித்தியாசம்
ஜோக் – 33
குடிக்க முடியாத டீ எது?
கரண்டி
ஜோக் – 34
கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
ஆட்டு இறைச்சி
ஜோக் – 35
KADI JOKES IN TAMIL: டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
இருவரும் அடிக்கடி மாற வேண்டும்
ஜோக் – 36
வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி.
ஜோக் – 37
நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?
நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.
ஜோக் – 38
கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்.
ஜோக் – 39
தாஜ்மஹாலுக்கு பெயிண்ட் அடிச்சா என்ன ஆகும்?
செலவாகும்
ஜோக் – 40
KADI JOKES IN TAMIL: அதிக Weight தூக்குற பூச்சி எது?
மூட்டைப் பூச்சி
KADI JOKES IN TAMIL
KADI JOKES IN TAMIL
ஜோக் – 41
கதவும், ஜன்னலும் இல்லாத ரூம் எது?
மஸ்ரூம் (காளான்)
ஜோக் – 42
பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?
தொப்பை
ஜோக் – 43
நோயாளி: பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்…டாக்டர்…?
டாக்டர்: 5 லட்ச ரூபாய் ஆகும்ங்க…!
நோயாளி: ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டு வந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க…?
ஜோக் – 44
ஆசிரியர்: எந்த ஆங்கில வார்த்தை நீளமானது?
மாணவன்: Smile – தான்.
ஆசிரியர்: இரண்டு Sகளுக்கு இடையே Mile இருக்கே..!
ஜோக் – 45
KADI JOKES IN TAMIL: என்னதான் திருப்பி பெரிய வீரனா இருந்தாலும்,
வெயில்அடிச்சா அதால அடிக்க முடியாது.
ஜோக் – 46
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்.
ஆனா ஓடுற பஸ்ஸுக்கு முன்னாடி
நிக்கமுடியாது.
ஜோக் – 47
கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,சத்தம் போட்டா கொலுசு வருமா..?
ஜோக் – 48
IJKL க்கு எனிமி யாரு?
MN தான், (எமன்)
OP ரேசனுக்குப்போனாலும்
Qல தான் நிக்கணும்
ஜோக் – 49
ஒருவனுக்கு செல்போன் என்றால் மிக அதிக விருப்பம் அவளுடைய அப்பாவிடம் எனக்கு ஒரு செல்போன் வேண்டும் என்று கேட்டான் அதற்கு அப்பா அவனுக்கு செல்போன் வாங்கி கொடுத்தார் ஆனால் அவன் செல்லை வாங்கி அப்படியே பார்த்துக் கொண்டே இருந்தான் ஏன் என்று தெரியுமா ?
அது பார்சல்
ஜோக் – 50
KADI JOKES IN TAMIL: ஒருவர் தன்னுடைய மனைவி வரும் பொழுது மட்டும் கண்ணாடி போட்டுக் கொண்டுள்ளார் ஏன் தெரியுமா ?
டாக்டர் தலைவலி வரும்போது மட்டும் போட சொன்னாராம்
ஜோக் – 51
ஒருவன் அவன் வளர்க்கும் நாய் குட்டிக்கு பாலை காதில் ஊற்றினான். ஏனென்று கேட்டதற்கு, ‘நாய்க்குட்டி வாயில்லா ஜீவன் என்று என் தாய் சொன்னாள். அதனால்தான் காதில் ஊற்றினேன்’ என்றான்
ஜோக் – 52
ஒரு பையன் கல்யாண தரகரிடம் எனக்கு ஸ்மார்ட்போன் வைத்துள்ள பொண்ணுதான் வேணும் என்று கூறினான், அது ஏன் ?
அப்போதுதான் அந்த பொண்ணு குனிந்த தலை நிமிராமல் செல்லும் என்றான்.
ஜோக் – 53
வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?
மைசூர் பாக்
ஜோக் – 54
டிரைவிங் லைசன்ஸ் வாங்குவதற்கு ஒருவன் சாக்பீஸ் எடுத்துக்கொண்டு சென்றான் அது ஏன்
எட்டு போட்டு காட்டுவதற்காக
ஜோக் – 55
KADI JOKES IN TAMIL: செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்
மனுசனுக்கு கால் இல்லைன்னா பேலன்ஸ் பண்ண முடியாது செல்போனுக்கு பேலன்ஸ் இல்லையென்றால் கால் பண்ண முடியாது
ஜோக் – 56
பல் டாக்டருக்கு தான் அதிகம் சொத்து இருக்கிறது அது ஏன் ?
என அவர் தான் எல்லாருடைய சொத்தையும் புடுங்கிறாரே
ஜோக் – 57
எந்த எழுத்தை எழுத முடியாது ?
தலையெழுத்தை
ஜோக் – 58
கடற்கரையில் வீடு கட்டினால் என்ன ஆகும் ?
காசு செலவாகும்
ஜோக் – 59
பத்து யானையில் ஒன்பது யானை பேருந்தில் ஏறி விட்டன ஒரு யானை மட்டும் அந்த பேருந்தில் ஏற வில்லை ஏன் ?
அது ஆண் யானை ,வந்ததோ லேடிஸ் பஸ்
ஜோக் – 60
KADI JOKES IN TAMIL: வாடிக்கையாளர்: சார், ஆறு வருஷத்துல நீங்க போட்ட பணம் இரட்டிப்பாகும்னு சொன்னீங்களே என்ன ஆச்சு?
வங்கி ஊழியர்: இரட்டிப்பாகும்னு தானே சொன்னோம் திருப்பித் தர்றதா சொல்லலையே