FREQUENT URINATION PROBLEM: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
Table of Contents
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை
FREQUENT URINATION PROBLEM: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தான் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது முக்கியமான காரணம் தான் என்றாலும் அதைத் தாண்டி சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் இதற்குக் காரணமாக இருக்கின்றன.
இந்த அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை உள்ளவர்கள் சில வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சினையை சரிசெய்ய முடியும். அந்த வீட்டு வைத்தியங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
FREQUENT URINATION PROBLEM
சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பெரும்பாலானோருக்கு இந்த பிரச்சினை ஏற்படும். அவர்கள் இதற்காகவும் சேர்த்து மருந்துகள் எடுத்துக் கொண்டால் சிறுநீரகப் பிரச்சினைகள் மேலும் மோசமடையலாம். அதனால் உணவுகளின் மூலமாகவும் வீட்டு வைத்தியங்களின் மூலமாகவும் சரிசெய்வது தான் ஆரோக்கியமான தீர்வாக இருக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் அறிகுறிகள்
FREQUENT URINATION PROBLEM: அடிக்கடி சிறுநீர் கழிப்பதும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது உடலில் உள்ள சில நோய் நிலைகளின் அறிகுறியாகும்.
SYMPTOMS
நீரிழிவு பிரச்சினை,
சிறுநீரகப் பாதை தொற்றுநோய்,
விதைப்பை பிரச்சினைகள்,
சிறுநீரக நோய்கள்,
கர்ப்ப காலம்,
பக்கவாதம்,
கருப்பை குழாய் கட்டி போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு தோன்றும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான வீட்டு வைத்தியம்
FREQUENT URINATION PROBLEM: அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது அதிகப்படியான சிறுநீர்ப்பை போன்ற அடிப்படை நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.
HOME REMEDIES
நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதாக இருந்தால், அடிப்படைக் காரணத்தைத் தீர்மானிக்க ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது அவசியம். இருப்பினும், அறிகுறிகளைப் போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன:
நீரேற்றத்துடன் இருங்கள்
FREQUENT URINATION PROBLEM: போதுமான திரவங்களை குடிப்பது உங்கள் சிறுநீர்ப்பையில் இருந்து பாக்டீரியா மற்றும் பிற நச்சுகளை வெளியேற்ற உதவும், இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும்.
சிறுநீர்ப்பை எரிச்சலைத் தவிர்க்கவும்
FREQUENT URINATION PROBLEM: சில உணவுகள் மற்றும் பானங்கள் உங்கள் சிறுநீர்ப்பையை எரிச்சலடையச் செய்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டுகளில் காஃபின், ஆல்கஹால், காரமான உணவுகள் மற்றும் செயற்கை இனிப்புகள் ஆகியவை அடங்கும்.
இரட்டை வாடிங்
FREQUENT URINATION PROBLEM: உங்கள் சிறுநீர்ப்பை முற்றிலும் காலியாக இருப்பதை உறுதி செய்வதற்காக குறுகிய காலத்திற்குள் இரண்டு முறை சிறுநீர் கழிக்க வேண்டும்.
மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ்
FREQUENT URINATION PROBLEM: சிலர் மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில் இருந்து நிவாரணம் காணலாம், ஏனெனில் மெக்னீசியம் சிறுநீர்ப்பையில் உள்ள தசைகளை தளர்த்த உதவும்.
கொள்ளுப் பயறு
FREQUENT URINATION PROBLEM: பாரம்பரியமாக வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்களில் ஒன்று தான் கொள்ளுப்பயறு. பல்வேறு பயோ – ஆக்டிவ் பண்புகள் கொண்ட இந்த கொள்ளுப்பயறு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
குடலில் தோன்றும் ஈகோலி பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடுவதோடு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாக கொள்ளு இருக்கும்.
KOLLU
எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
FREQUENT URINATION PROBLEM: அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை உள்ளவர்கள் கொள்ளுப்பயறை சுத்தம் செய்து ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை வெந்நீரில் கலந்து குடித்து வரலாம்.
கிரான்பெர்ரி ஜூஸ்
FREQUENT URINATION PROBLEM: கிரான்பெர்ரி ஜூஸ் எல்லா வகையான சிறுநீரகப் பிரச்சினைக்கு முதன்மையான தீர்வாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
CRANBERRY JUICE
குறிப்பாக சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப் பாதை தொற்று ஆகியவற்றை சரிசெய்யும் ஆற்றல் இந்த கிரான் பெர்ரி ஜூஸிற்கு உண்டு.
கிரான்பெர்ரி ஜூஸை தினமும் குடித்து வரும்போது சிறுநீர் கடுப்பு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
சீரகம்
FREQUENT URINATION PROBLEM: சீரகம் மருத்துவ குணங்களும் வாசனையும் நிறைந்த மசாலா பொருள்களில் ஒன்று. இது பல்வேறு பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்ட சீரகம் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றையும் எதிர்த்துப் போராடுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
துளசி
FREQUENT URINATION PROBLEM: துளசி பல்வேறு வகையான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஆயுர்வேதத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களில் ஒன்றான சிறுநீர் பாதை தொற்றுநோய்களை சரிசெய்ய துளசி உதவி செய்கிறது.
THULASI
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை உள்ளவர்கள் குளசியை நன்கு இடித்து சாறெடுத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
துளசி இலைகளை இடித்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து கஷாயமாகவும் செய்து குடிக்கலாம்.
நெல்லிக்காய்
FREQUENT URINATION PROBLEM: நெல்லிக்காயில் அதிக அளவிலான வைட்டமின் சி யும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தன்மையைக் கட்டுப்படுத்தி சிறுநீரக மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்கிறது.
AMLA
நான்கு நெல்லிக்காயின் சாறினை எடுத்து தண்ணீர் கலந்து ஜூஸாகவோ அல்லது தேன் சேர்த்தோ சாப்பிடலாம்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த நெல்லிக்காய் சாறினை எடுத்துக் கொள்வதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களையும் தடுக்க முடியும்.
வெந்தயம்
FREQUENT URINATION PROBLEM: வெந்தயம் ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் உதவுகிற முக்கியமான ஒன்று.
இதிலுள்ள ஆல்கலாய்டுகள், ஸ்டீராய்டுகள் மற்றும் ட்ரைகோனெல்லைன் ஆகியவை ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கச் செய்கிறது.
VENDAYAM
வெந்தயம் மிகச்சிறந்த ஆக்சிஜனேற்றியாகச் செயல்படுகிறது. அதனால் உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தம் குறைந்து நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு அடிக்கடி சிறுநீர் கழிப்பதையும் குறைக்கச் செய்கிறது.
தினமும் ஒரு ஸ்பூன் வெந்தய விதைகளை பொடியாகவோ அல்லது ஊறவைத்தோ அல்லது தினசரி சமையலில் சேர்த்தோ எடுத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவைக் கட்டுக்குள் வைப்பதோடு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளையும் கட்டுப்படுத்துகிறது.
மாதுளை தோல்
FREQUENT URINATION PROBLEM: மாதுளை பழத்தின் தோல் நுண்ணுயிரிகளை அழிக்கும் மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டது.
ஈகோலி பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்ட இந்த மாதுளை பழத்தோல் அடிக்கடி சிறுநீர் கழிக்கக் காரணமாகும் சிறுநீர்ப் பாதைத் தொற்றுக்களைச் சரிசெய்ய உதவுகிறது.
POMEGRANATE
மாதுளை பழத்தினுடைய தோலை உரித்து நன்கு சுத்தம் செய்து எடுத்து அதை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை தினமும் ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர சிறுநீர் பாதை தொற்றுக்கள் குறைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தன்மையும் குறைய ஆரம்பிக்கும்.
கேகல் உடற்பயிற்சிகள்
FREQUENT URINATION PROBLEM: கேகல் உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் உங்களுடைய பெல்விக் பகுதியில் இருக்கும் தசைகள் வலிமை பெறும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரக மண்டலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள தசைப்பகுதிகள் அயர்ந்து வலுவிழந்து போகும்.
ஆனால் கேகல் பயிற்சிகள் மேற்கொள்ளும்போது சிறுநீரக மண்டலத்தின் தசைகள் வலுப்பெறுவதோடு சிறுநீர் கழித்த பின் மிக ரிலாக்ஸாக உணர்வீர்கள்.
குருதிநெல்லி சாறு
FREQUENT URINATION PROBLEM: குருதிநெல்லி சாறு குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.
உங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறியவும், நீங்கள் முயற்சி செய்யும் வீட்டு வைத்தியம் பற்றி விவாதிக்கவும் ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிக்கவும்
மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?
FREQUENT URINATION PROBLEM: அடிக்கடி சிறுநீர் வருவதற்கு பல்வேறு மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் கீழ்வரும் சில அறிகுறிகளுடன் சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.
DOCTOR VISIT
சிறுநீர் கழிக்கும்போது வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுதல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், பின்புற முதுகுப் பகுதி மற்றும் இரண்டு பக்கங்களிலும் உண்டாதல், பிறப்புறுப்புகளில் இருந்து திரவம் வெளியேறுதல், காய்ச்சல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.