TNPSC ASPIRANTS 2023: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே இனி இந்த மத்திய தேர்வுகளிலும் கவனம் செலுத்துக

0
433
TNPSC ASPIRANTS 2023

TNPSC ASPIRANTS 2023

TNPSC ASPIRANTS 2023: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் TNPSC தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

  • பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்புகிறது. அதேபோன்று, அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியமும், மருத்துவத் துறை சார்ந்த பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையமும் தேர்வு செய்து வருகின்றன.
  • பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சிப் போக்கு, அரசாங்க மனிதவள கொள்கைகள் மற்றும் நிதிச் சுமை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இந்தாண்டு ஆசிரிய பட்டதாரிகளுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கு முன்வந்திருப்பதாக தெரிகிறது.
  • உதாரணமாக, தமிழ்நாடு ஆசிரயர் தேர்வு வாரியம் 2023ம் ஆண்டுக்கான தனது தேர்வு திட்ட அட்டவணையில் 15,000 ஆசிரியர் இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது.
  • இதில், குறிப்பாக பட்டதாரிகள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த உதவி பேராசிரியர்கள் (4000 காலியிடங்கள்) பணியிடங்களுக்கான அறிவிப்பும் இடம் பெற்றது.
  • அதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்களுக்கு இதுநாள் வரை வேலை வழங்கப்படாத நிலையில், இந்தாண்டு 6553 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களும், 3,587 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களும் நிர்ப்பப்படும் என்றும் தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேபோன்று, 2023 ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II குறித்த அறிவிப்பும் இந்தாண்டு வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
  • அதேசமயம், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்ட 2023 ஆண்டுத் திட்டத்தில் பெரும்பாலான தேர்வுகள் துறை சார்ந்த தேர்வுகளாக உள்ளன.
  • மேலும், லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப் 2, 2ஏ தேர்வு குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், குரூப்-IV தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன? 

TNPSC ASPIRANTS 2023

  • TNPSC ASPIRANTS 2023: இந்தாண்டு குரூப் 2,2ஏ, 4 தேர்வுகள் இடம் பெறாததற்கு இரண்டு முக்கியக் காரணங்களை வேலைவாய்ப்பு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
  • முதலவாதாக, மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியாளர்களை பணிக்கு அமர்த்தும் இயக்கத்தினை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • இந்த இயக்கத்தின் கீழ், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission), டெல்லி காவல்துறை, கேந்திர வித்யாலயா சங்கதன் உள்ளிட்ட முகமைகள் தொடர்ச்சியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
  • இந்தாண்டு, முழுவதும் தொடர்ச்சியாக மத்திய அரசு ஸ்தாபனங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் சொற்ப அளவிலான நபர்கள் மட்டுமே தேர்வாகின்றி வருகின்றனர்.
  • எனவே, தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்ட வேண்டும் என்ற நோக்கில் கூட இந்தாண்டு குரூப் 2, 4 தேர்வுகளை தமிழ்நாடு அரசு தவிர்த்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் .
  • இரண்டாவதாக, தமிழ்நாட்டில் உயர்கல்வி படித்த இளைஞர்கள்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் வேலைவாய்ப்பின்மை அதிகம் காணப்படுகிறது. அதிகப்படியான பட்ட தாரிகள், அரசு வேலையைப் பெற்றுக் கொள்வதற்காக வேலையற்றிற்கும் நிலையில் உள்ளனர்.
  • அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் நிலையிலிருந்து விலகிச் செல்லாமா? வேண்டாமா என்ற குழப்பும் இவர்களிடத்தில் காணப்படுகுறிது. எனவே, இத்தகைய தேர்வர்களை அரசுத் துறைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மையை குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
  • தனியார் துறைகளால் வேலை தேடுவோருக்கான வேலைவாய்ப்பு முகாமினை தமிழ்நாடு அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதர தேர்வுகளில் கவனம் செலுத்துங்கள்

TNPSC ASPIRANTS 2023

  • TNPSC ASPIRANTS 2023: குரூப் 1, 2,4 தேர்வுகளுக்கு தேர்வுகளுக்கு தயாராகி வரும் மானவர்கள், யூபிஎஸ்சி (UPSC) போன்ற போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வது நல்லது. அதேபோன்று, வங்கிப் பணிகளுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.
  • பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 பதவி (RRBs – CRP RRB-XI (Office Assistants) and CRP RRB-XI (Officers)), பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் ஆட்சேர்ப்பு (IBPS – Clerk Examination), எஸ்பிஐ வங்கி (SBI Bank Clerk Examination), ஐபிபிஎஸ் ப்ரோபேஷனரி ஆபீசர்/மேனேஜ்மென்ட் என பல ஆயிரம் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வங்கித் தேர்வுகள் நடைபெறுகின்றன.

மத்திய அரசுத் துறைகளில் வெளியிடப் பட்டுள்ள சமீபத்திய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

  • TNPSC ASPIRANTS 2023: எல்.ஐ.சி மாபெரும் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்… 1,516 அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரி காலியிடங்கள்!
  • மத்திய உள்துறை அமைச்சகத்தில் 1,675 காலியிடங்கள்: 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்
  • 12ம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய துணை காவல் படையில் 1458 காலியிடங்கள்: இளைஞர்களே உடனே விண்ணப்பியுங்கள்
  • மத்திய அரசில் 11,000 காலியிடங்கள்… தமிழில் எழுத்துத் தேர்வு.. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • எல்ஐசி குழுமத்தில் ரூ.53,000 சம்பளத்தில் 300 காலியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு