NOTHING PHONE 2 MOBILE: நத்திங் போன் 2

1
289
NOTHING PHONE 2

NOTHING PHONE 2

NOTHING PHONE 2 MOBILE – நத்திங் போன் 2: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் NOTHING PHONE 2 – நத்திங் போன் 2 தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

நத்திங் நிறுவனம் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான நத்திங் (Nothing), அதன் நத்திங் போன்(1) (Nothing Phone 1) அறிமுகத்தின் மூலம் மிக விரைவில் சர்வதேச அளவில் பிரபலமானது.

லண்டனை தளமாக கொண்ட நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்ஃபோனான நத்திங் 1 (Nothing Phone 1) இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து தற்போது இந்நிறுவனம் தனது அடுத்த படைப்பான நத்திங் 2 போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய நத்திங் நிறுவனத்தின் துணை நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei) இந்த புதிய ஸ்மார்ட்போன் ஒரு குறிப்பிட்ட சந்தையில் மட்டும் முதலில் விற்பனைக்கு அறிமுகம் ஆகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது அமெரிக்க சந்தையில் அதிக முக்கியத்தும் கொடுப்பதால், புது நத்திங் போன் 2 டிவைஸை நிறுவனம் அமெரிக்காவில் முதலில் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக நத்திங் போன் (2) இந்தியாவில் அறிமுகமாகாது என்றில்லை எனவும் அவர் கூறினார். இதன் சிறப்பசங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

NOTHING PHONE 2

முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் 1 ஸ்மார்ட்போன் 6.55′ இன்ச் ஃப்ளக்ஸிபில் (Flexible) OLED டிஸ்ப்ளே – 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. அதுமட்டுமல்லாமல், குவல்காம் ஸ்னாப்ட்ராகன் 778+ SoC (Qualcomm Snapdragon 778+ SoC) பிராசஸரில் மூலம் இயங்குகிறது.

இதுபோக, 50MP + 50MP இரு பிரைமரி கேமரா, 16MP முன்பக்க செல்ஃபி கேமரா உள்ளிட்டவை கொண்டுள்ளது. 4500mAh பேட்டரி 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.

இது முந்தைய மாடலை அதிக பிரீமியமாக இருக்கும் என்றும் இதன் மென்பொருள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பிரீமியம் என்ற வகையில், இந்த ஸ்மார்ட்போனில் ஃபிளாக்ஷிப் தர அம்சங்கள் வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது.