MAHA SHIVARATRI WISHES IN TAMIL 2023: மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்

0
516
MAHA SHIVARATRI WISHES IN TAMIL
MAHA SHIVARATRI WISHES IN TAMIL

MAHA SHIVARATRI WISHES IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் மகா சிவராத்திரி தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி

MAHA SHIVARATRI WISHES IN TAMIL: இந்து மதம் என்பது மதம் இல்லை, அது வாழ்வியல் நெறிமுறை, எப்படி ஒரு மனிதன் வாழவேண்டும் என்று செல்லும் நெறிமுறை பின்னடைய முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள் மூலம் மக்களுக்கு இறைவனால் சொல்லப்பட்ட விதிமுறைகள். என்பதே நிதர்சனமான உண்மை. சரி இனி ஒவ்வரு ரீதியான பதில்களையும் பார்க்கலாம்.

MAHA SHIVARATRI WISHES IN TAMIL
MAHA SHIVARATRI WISHES IN TAMIL

MAHA SHIVARATRI WISHES IN TAMIL:  சிவராத்திரி என்பது விழா அல்ல! அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.

To Know More About Maha Shivratri History in Tamil & Happy Maha Shivratri Wishes in Tamil

சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

MAHA SHIVARATRI WISHES IN TAMIL
MAHA SHIVARATRI WISHES IN TAMIL

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

‘சிவ’ என்ற சொல்லே ‘மங்களம்’ என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவராத்திரிகளில், மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மஹாசிவராத்திரி என்று ஐவகை உண்டு. இதில் மகாசிவராத்திரி விரதமே மிகப் பெரும் வழிபாடாகக் கொண்டாடப்படுகிறது.

MAHA SHIVARATRI WISHES IN TAMIL
MAHA SHIVARATRI WISHES IN TAMIL

நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும்.

நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்

சிவராத்திரியை ஏன் தேய்பிறையின், 14ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா?

MAHA SHIVARATRI WISHES IN TAMIL: மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும்.

MAHA SHIVARATRI WISHES IN TAMIL
MAHA SHIVARATRI WISHES IN TAMIL

அப்படி கட்டிப் போட்டாலும், அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும்.

அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும், முதலும், முடிவும் இல்லாதவர்.

மனிதர்களுக்கு அப்படி இல்லை. நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன.

சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். ‘எழுபிறவி’ என்பதே சரி! நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம்.

பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது… அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்… அதுதான், ‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும்.

மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்!

MAHA SHIVARATRI WISHES IN TAMIL: மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

MAHA SHIVARATRI WISHES IN TAMIL
MAHA SHIVARATRI WISHES IN TAMIL

MAHA SHIVARATRI WISHES IN TAMIL: மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று சிவனை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.

  • மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது.
  • அடியார்கள், சிவாச்சாரியார்கள், கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரியவில்லை,
  • உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.
  • உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான்.
  • கோவில் என்ன சிற்றுண்டி கடையா? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது. கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை.

சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

MAHA SHIVARATRI WISHES IN TAMIL: யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைப்பிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைப்பிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.

MAHA SHIVARATRI WISHES IN TAMIL
MAHA SHIVARATRI WISHES IN TAMIL

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

அர்ஜூனன் சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் இட்டு, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே.

சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றே.

மகா சிவராத்திரி வாழ்த்துகளின் பட்டியல்

MAHA SHIVARATRI WISHES IN TAMIL: நிச்சயமாக, நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்:

  • மஹா சிவராத்திரியின் இந்த மங்களகரமான தருணத்தில் சிவபெருமான் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் தனது ஆசீர்வாதங்களைப் பொழியட்டும்.
  • உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமான மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்! சிவபெருமான் உங்களுக்கு வலிமையையும், தைரியத்தையும், ஞானத்தையும் அருளட்டும்.
MAHA SHIVARATRI WISHES IN TAMIL
MAHA SHIVARATRI WISHES IN TAMIL
  • சிவபெருமானின் தெய்வீக ஒளி உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்குகிறது மற்றும் வெற்றி மற்றும் மகிழ்ச்சியை நோக்கி உங்களை வழிநடத்தட்டும். மஹா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்!
  • இந்த மகா சிவராத்திரியில், சிவபெருமான் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி, உங்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருவானாக.
  • சிவபெருமானின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும், உங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றியடையட்டும். மஹா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்!
  • இந்த மஹா சிவராத்திரியின் இனிய திருநாளில் சிவபெருமானின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டாகட்டும். ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டம்.
  • சிவபெருமான் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் தருவானாக. மஹா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்!
  • உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் மங்களகரமான மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்! சிவபெருமான் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் ஆசீர்வாதத்துடனும் நிரப்பட்டும்.
  • இந்த மஹா சிவராத்திரியிலும் சிவபெருமானின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும். ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டம்!
  • MAHA SHIVARATRI WISHES IN TAMIL: மஹா சிவராத்திரியின் போது, சிவபெருமான் உங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி, வெற்றி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் உங்களை ஆசீர்வதிப்பாராக.