KOTHAMALLI PONGAL: கொத்தமல்லி பொங்கல்

0
267
Kothamalli Pongal

Kothamalli Pongal

KOTHAMALLI PONGAL – கொத்தமல்லி பொங்கல்: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் சமையல் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.

To Know More About – கொத்தமல்லியின் மருத்துவ பயன்கள் / MEDICAL BENEFITS OF KOTHAMALLI (CORIANDRUM SAVITUM)

சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.

தேவையான பொருட்கள்

  • KOTHAMALLI PONGAL – கொத்தமல்லி பொங்கல்: பச்சரிசி – 250 கிராம்,
  • பாசிப்பருப்பு – 150 கிராம்,
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி,
  • சீரகம் – 1 தேக்கரண்டி,
  • மிளகு – 1 தேக்கரண்டி,
  • காய்ந்த மிளகாய் – 2,
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி,
  • பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி,
  • கொத்தமல்லித்தழை – 4 கைப்பிடி,
  • நெய் – 6 தேக்கரண்டி,
  • முந்திரி – தேவையான அளவு,
  • உப்பு – தேவையான அளவு,
  • தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை

  • KOTHAMALLI PONGAL – கொத்தமல்லி பொங்கல்: முதலில் அடி கனமான பாத்திரத்தில் 600 மில்லி தண்ணீர் ஊற்றவும்.
  • நன்றாக கழுவிய பச்சரிசி, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், 3 தேக்கரண்டி நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து குழைவாக வேக வைக்கவும்.
  • பிறகு வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.
  • பின்னர் அதை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பொங்கலுடன் கொத்தமல்லி விழுதை சேர்த்து கிளறவும்.
  • மீதமுள்ள நெய்யில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வதக்கி, நெய்யுடன் பொங்கலில் ஊற்றிக் கிளறவும். இப்பொழுது சுவையான கொத்தமல்லி பொங்கல் தயார்.