உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் பசலைக்கீரை தோசை செய்வது எப்படி? / HOW TO MAKE PALAK DOSAI RECEIPE IN TAMIL

0
583

PALAK DOSAI RECEIPE

  • உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் பசலைக்கீரை தோசை செய்வது எப்படி? / HOW TO MAKE PALAK DOSAI: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் (PALAK DOSAI) பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
  • பசலை என்பது பசல்லேசேவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடித் தாவரமாகும். இது கீரையாகவும், மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதற்கு கொடிலை, கொடிப்பயலை, கொடிவசலை, பசளை, கொடியலை என வேறு பெயர்களும் உள்ளன.
  • இது வெப்பமண்டல ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் காணப்படுகிறது, இப்பகுதிகளில் இது பரவலாக கீரையாக பயன்படுத்தப்படுகிறது
  • பசலைக்கீரை சாப்பிடுவதால் மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு போன்றவை நீங்கும்.
  • மலச்சிக்கல், தொந்தி போன்றவற்றுக்கும் இந்தக் கீரை நல்லதொரு நிவாரணி. கால் மூட்டுகளில் வரக் கூடிய வாதத்தை போக்கக்கூடியது.
  • கீரையின் சாறு, முகப்பருக்களை நீக்கக்கூடியது.
  • வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாக இருக்கும் பசலைக்கீரை, இரத்தத்தின் ஹீமோகுளோபின் உற்பத்தியினை வெகுவாக அதிகரித்து உடல் நலனை பாதுகாக்கும்.
  • இவ்வாறான சத்து நிறைந்த கீரைகளை வெரைட்டி தோசையாகவும் செய்து சாப்பிடலாம்.

பசலைக்கீரை தோசை (PALAK DOSAI) செய்ய தேவையான பொருட்கள்

  • இட்லி மாவு – 300 கிராம்,
  • பசலைக்கீரை – 1 கட்டு,
  • பெரிய வெங்காயம் – 2,
  • பச்சை மிளகாய் – 2,
  • உப்பு & எண்ணெய் – தேவையான அளவு..

செய்முறை

  • முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய், பசலைக்கீராய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு பசலைக்கீரை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்துக்கொள்ளவும்.
  • அதே கடையில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தனியே வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
  • இதனோடு தேவையான அளவு உப்பு சேர்த்து தோசைக்கல்லில் தோசை போல ஊற்றி எடுத்தால், சுவையான பசலைக்கீரை தோசை தயார்.