CHOCOLATE CYST IN TAMIL: சாக்லேட் சிஸ்ட் என்ற சினைப்பை கட்டி

0
1296

CHOCOLATE CYST IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் HOMELOAN தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

சாக்லேட் சிஸ்ட் என்ற சினைப்பை கட்டி

CHOCOLATE CYST IN TAMIL: சாக்லேட் நீர்க்கட்டி அல்லது கருப்பை எண்டோமெட்ரியோமா என்பது கருப்பையில் காணப்படும் ஒருவித திரவத்தால் நிரப்பப்பட்ட நீர் கட்டியாகும். இந்த நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு சில நேரம் அறிகுறிகள் இல்லாமல் கூட இருக்கலாம்.

இந்த நீர்க்கட்டி 20 முதல் 40 சதவீதம் பெண்களை தாக்குகிறது. இந்த நீர்க்கட்டியின் உட்புறம் ஆனது பழைய மாதவிடாய் இரத்தம் மற்றும் திசுக்களால் நிரப்பப்பட்டிருக்கும்.

மாதவிடாய் காலத்தில், எண்டோமெட்ரியல் திசு உடைந்து உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் சாக்லேட் நீர் கட்டி உடைய பெண்களில் அந்த திசுவானது வெளியேற்றப்படாமல் மாதவிடாயின் ரத்தத்துடன் ஃபலோபியன் குழாய்களில் இருந்து மீண்டும் கருப்பைக்குள் பாய்கிறது. இவை சாக்லேட் நீர்க்கட்டிகளில் தங்கி விடுகின்றன.

அறிகுறிகள்

  • CHOCOLATE CYST IN TAMIL: மாதவிடாய் நேரங்களில் அடிவயிற்று பகுதியில் கடுமையான வலி அல்லது வீக்கம்.
  • கருப்பு நிற உதிரப்போக்கு
  • உடலுறவின் போது வலி
  • கடினமான செயல்களின் போது வலி
  • சிறுநீர் கழிக்கும் போது வலி
  • மலம் கழிக்கும் போது வலி
  • கருவுறாமை
  • சீரற்ற மாதவிடாய் சுழற்சி

மேற்கூறிய பிரெச்சனைகள் இவர்களுக்கு ஏற்படக்கூடும். இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்வது முக்கியமாகும். ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் இந்தக் கட்டிகள் இருப்பதை கண்டறிய முடியும். மருந்து மாத்திரைகள் மட்டுமல்லாமல் சில நேரங்களில் இயற்கை வைத்தியத்தின் மூலமும் இவற்றை குணப்படுத்தலாம்.