AVERAGING DOWN IN STOCK MARKET: பங்குச்சந்தையில் ஆவரேஜிங் டவுன்

0
514

AVERAGING DOWN IN STOCK MARKET: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் AVERAGING DOWN IN STOCK MARKET தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனப் பங்கு ஒன்றினை முன்பு ஒரு விலையில் வாங்கிவிட்டு, பின்னர் அதே பங்குகளை குறைந்த விலையில் வாங்குவது ஆவரேஜிங் டவுன் எனப்படும்.

இதன் மூலம் அப்பங்கு உயரும் போது விரைவில் நமது மூலதனத் தொகையை தாண்டி லாபம் பெறலாம். இது எல்லாப் பங்குகளுக்கும் பொருந்துமா? எப்போது இதனைப் பயன்படுத்த வேண்டும்? என பார்க்கலாம்.

பங்குச்சந்தையில் நுழைந்து பல ஆண்டுகளாக முதலீடு மற்றும் வர்த்தகம் செய்பவர்களுக்கு ஆவரேஜிங் என்பது அத்துப்படி.

AVERAGE DOWN IN STOCK MARKET

பங்குச்சந்தைக்கு புதியவர்களுக்கு ஆவரேஜிங் என்றால் என்ன என்ற சந்தேகம் இருக்கும். அது எளிதான ஒன்று தான். உதாரணத்திற்கு ஆக்சிஸ் வங்கியின் 100 பங்குகளை ரூ.700-க்கு (700*100 = 70,000) வாங்குகிறீர்கள். சில நாட்களில் அந்நிறுவனப் பங்குகள் ரூ.650-க்கு சரிகிறது.

அப்போது மீண்டும் 100 பங்குகளை வாங்குகிறீர்கள் எனில், உங்களிடம் இருக்கும் ஒரு பங்கின் ஆவரேஜ் விலையானது ரூ.675 ஆக இருக்கும். (70,000 + 65,000 = 1,35,000) அதனை 200 பங்குகளால் வகுத்தால் கிடைப்பது தான் ஆவரேஜ் விலை.

இவ்வாறு செய்யும் போது நாம் முன்னர் வாங்கி வைத்த பங்கின் விலையை ரூ.25 குறைக்கிறோம். இந்தப் பங்கு மீண்டும் ரூ.700 விலைக்கு வரும் போது நமது லாபம் ரூ.5,000 ஆக இருக்கும்.

ஆவரேஜிங் செய்யாமல் விட்டிருந்தால். லாபம் ஏதும் கிடைக்காது. இதன் மூலம் இழப்பு குறையுமா?ஆவரேஜ் செய்வதன் மூலம் நமது இழப்பு குறையுமா என்றால் குறையாது. ஒரு பங்கிற்கு ரூ.50 இழப்பு எனில் 100 பங்கிற்கு ரூ.5,000 இழப்பு என்பது மாறாது.

ஏற்கனவே வாங்கியுள்ள பங்கின் விலையை மட்டுமே ரூ.700லிருந்து, ரூ.675 ஆக குறைக்கும். எப்போது ஆவரேஜிங் டவுன் செய்யலாம்இதற்கென விதிகள் எல்லாம் ஏதும் இல்லை. ஒரு நிறுவனத்தின் அடிப்படை விஷயங்கள் நிலையாக உள்ளது.

ஆனால் திடீரென கிளம்பிய ஏதேனும் செய்தியால் அல்லது சுழற்சி முறையில் லாபத்தில் இருப்பவர்கள் பங்குகளை விற்பதால் விலை குறைகிறது எனில் அந்தப் பங்கினை ஆய்வு செய்து, நீண்டகாலத்திற்கு ஏற்றது என தெரியவந்தால், அப்போது விலை குறைய குறைய கணிசமாக வாங்கிச் சேர்க்கலாம்.

யுத்திகள் நபருக்கு நபர் மாறுபடும் சிலர் தாங்கள் வாங்கிய நல்ல பங்கு 10% குறைந்தால் அப்போது ஆவரேஜ் செய்வார்கள், சிலர் 5% குறைந்தால் ஆவரேஜ் செய்வார்கள். ஆவரேஜ் செய்யப்பட்ட பங்கு விலை மேலும் சரிந்தால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும்.

ஏனென்றால் நம்மிடம் 100 பங்குகள் இருந்த இடத்தில் தற்போது 200 பங்குகள் இருக்கும். எனவே அண்டர்வேல்யூ என தெரியும் பங்குகளில் மட்டும் நீண்டகால நோக்கில் இதனைச் செய்யலாம். வாரன் பப்பெட் போன்ற பங்குச்சந்தை பிதாமகர்கள் ஆவரேஜிங் டவுன் யுத்தியை சரியாக கையாண்டு கொழுத்த லாபம் பார்த்திருக்கிறார்கள்.