TNPSC MAIN EXAMINATION SOCIAL ISSUES Q and A 1

0
232
TNPSC MAIN EXAMINATION SOCIAL ISSUES Q and A 1
TNPSC MAIN EXAMINATION SOCIAL ISSUES Q and A 1

Table of Contents

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் / UNEMPLOYMENT RATE IN INDIA

TAMIL

  • கொரோனாவிற்கு பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்து இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் நிறுவனம் (CMIE) தரவுகளை வெளியிட்டுள்ளது. 
  • Monitoring Indian Economy (CMIE) நிறுவனம் வெளியிட்டு தரவுகள் விவரம்: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது மார்ச் மாதத்தில் 7.60% ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 7.83% ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே ஹரியானாவில்தான் வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது.
  • நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையானது மார்ச் மாதத்தில் 8.28% ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 9.22% ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால் ஊரகப் பகுதிகளில் மார்ச் மாதம் 7.29% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை ஏப்ரலில் 7.19% ஆக குறைந்துள்ளது.
  • வேலையின்மை விகிதம் நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியானாவில் 34.5 சதவிகிதமாக உள்ளது. அதேபோலவே, ராஜஸ்தானில் 28.8, பீகாரில் 21.1, ஜம்மு காஷ்மீரில் 15.6 சதவிகிதமாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. 
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மார்ச் மாதம் 4.1 சதவிகிதமாக ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 3.2 சதவிகிதமாக குறைந்துள்ளது.
  • அதே சமயம் ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது எனவும், இது நல்ல முன்னேற்றம் எனவும் என சிஎம்ஐஇ நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார். 
  • ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 36.46 சதவீதத்தில் இருந்து 37.05 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 15.6% என உள்ளது.. அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைவு.
  • மத்திய அரசு கடந்த மாதம் 28-ந் தேதி முக்கிய துறைகளின் வேலைவாய்ப்பு தொடர்பான காலாண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை உற்பத்தி, வர்த்தகம் உள்ளிட்ட 9 துறைகளில் மொத்தம் 4,00,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம்/பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகிய ஒன்பது முக்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 
  • To Know More About – MIDJOURNEY PROMO CODE
  • 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் பிரிவில் இந்த ஒன்பது துறைகள் மொத்த வேலைவாய்ப்பில் 85 சதவீதத்திற்கு பொறுப்பாகும்.
  • அதேபோல் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வேலைவாய்ப்புகளில் உற்பத்தி துறை 39% உடன் முதல் இடத்திலும், கல்வி துறை 22% உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
  • ஏறக்குறைய அனைத்து (99.4%) நிறுவனங்களும் வெவ்வேறு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 23.55% நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வேலையில் பயிற்சி அளித்தன என்றும் மத்திய அரசின் காலாண்டு ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.

ENGLISH

  • Unemployment rate in India is on the rise after Corona. The Indian Economic Monitor (CMIE) has released data on the unemployment rate for April.
  • Data released by Monitoring Indian Economy (CMIE): The unemployment rate in India was 7.60% in March. It rose to 7.83% in April. Haryana has the highest unemployment rate in the country.
  • Unemployment in urban areas was 8.28% in March. This is up from 9.22% in April. But unemployment in rural areas fell to 7.19% in April from 7.29% in March.
  • Haryana has the highest unemployment rate in the country at 34.5 percent. Similarly, Rajasthan has a unemployment rate of 28.8 per cent, Bihar 21.1 per cent and Jammu and Kashmir 15.6 per cent.
  • For Tamil Nadu, the unemployment rate fell to 3.2 percent in April from 4.1 percent in March.
  • At the same time, CMIE Managing Director Mahesh Vyas said that the labor force participation and employment rate had increased in April, which was a good improvement.
  • The employment rate rose to 37.05 per cent in April from 36.46 per cent in the previous month. The unemployment rate in Jammu and Kashmir is 15.6%. The lowest unemployment rate is in Assam, Madhya Pradesh, Meghalaya and Odisha.
  • The federal government released a quarterly study on employment in key sectors on the 28th of last month. It said a total of 4,00,000 jobs were created in nine sectors, including manufacturing and trade, from October to December 2021.
  • Jobs also rose in nine key sectors: manufacturing, construction, trade, transportation, education, healthcare, hospitality, information technology / BPO and financial services.
  • These nine sectors account for 85 percent of total employment in the company segment with 10 or more employees.
  • The report also points to an increase in employment in companies that employ 10 or more workers. The manufacturing sector ranks first with 39% of employment and the education sector ranks second with 22%.
  • Almost all (99.4%) companies are registered under different laws. About 23.55% of companies have trained their workers on the job, according to the federal government’s quarterly survey

தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு அமைப்பு குழந்தைத் திருமணங்கள் குறித்து ஆய்வு / REPORT OF CHILD MARRIAGE BY NFHMO

TAMIL

  • தேசிய குடும்ப சுகாதார கண்காணிப்பு அமைப்பு குழந்தைத் திருமணங்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.
  • திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக பெண்களுக்கு 18-ம், ஆண்களுக்கு 21-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 18 முதல் 29 வயது வரையுடைய பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பேருக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. 
  • இதேபோல், 21 முதல் 29 வயது வரையுடைய ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 15 சதவிகித பேருக்கு 21 வயதுக்கு முன்பே திருமணம் நடைபெற்றுள்ளது.
  • இதில், பெண்களுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்த மாநிலங்களில் மேற்குவங்கம் 42 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 
  • பீகார் (42%), திரிபுரா (39%, ஜார்க்கண்ட் (35%), ஆந்திரப்பிரதேசம் (33%), அஸ்ஸாம் (32%), தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ (28%), தெலுங்கானா (27%), மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் (25%) ஆகியவை இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • அதுபோல், குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே ஆண்களுக்கு திருமணம் நடைபெறும் மாநிலங்களில் 25 சதவிகிதத்துடன் பீகார் முதலிடத்தில் உள்ளது. 
  • குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் 24 சதவிகிதத்துடனும், ஜார்க்கண்ட் 22 சதவிகிதத்துடனும், அருணாச்சலப்பிரதேசம் 21 சதவிகிதத்துடனும், மேற்கு வங்கம் 20 சதவிகிதத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • இதில், குறைந்தபட்சமாக லட்சத்தீவு, சண்டீகரில் 1 சதவிகிதத்துக்கும் குறைவான ஆண்களுக்கு திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது. 
  • கேரளத்தில் 1 சதவிகித ஆண்களுக்கும், தமிழ்நாடு, கர்நாடகா, நாகலாந்து ஆகிய மாநிலங்கள் 4 சதவிகித ஆண்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது. 
  • 11 சதவிகித திருமணங்கள் ரத்த சொந்தங்களில் நடைபெறுவதும், இது கேரளம் தவிர்த்து தென் மாநிலங்களில் பொதுவான நிகழ்வாக காணப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ENGLISH

  • The National Family Health Monitoring Organization has conducted a study on child marriages. While the minimum age for marriage was set at 18 for women and 21 for men, a study of women between the ages of 18 and 29 found that 25 percent had child marriages.
  • Similarly, in a study of men aged 21 to 29, 15 per cent were married before the age of 21. Of these, West Bengal tops the list of states with 42 per cent child marriages for women.
  • Bihar (42%), Tripura (39%, Jharkhand (35%), Andhra Pradesh (33%), Assam (32%), Dadra and Nagar Haveli and Daman and Diu (28%), Telangana (27%), Madhya Pradesh, Rajasthan States (25%) are next in line on this issue.
  • Similarly, Bihar tops the list with 25 per cent of the states where men get married before reaching the minimum age of marriage.
  • Gujarat, Rajasthan, Madhya Pradesh are next with 24 per cent, Jharkhand with 22 per cent, Arunachal Pradesh with 21 per cent and West Bengal with 20 per cent.
  • Of these, at least in Lakshadweep, less than 1 per cent of men in Chandigarh get married before reaching the age of marriage.
  • In Kerala 1 per cent of men and in Tamil Nadu, Karnataka and Nagaland 4 per cent of men get married before reaching the minimum age of marriage.
  • The study revealed that 11 per cent of marriages take place between blood relatives and this is a common occurrence in the southern states except Kerala.

நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் / COUNTRY FERTILITY RATE

TAMIL

  • கடந்த 1992-93ம் ஆண்டு முதல், நாட்டின் திட்டமிடலுக்கான கொள்கைகளை வகுப்பதற்காக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 
  • 2015-16ல் 4வது ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், கடந்த 2019-21 இடையே 2 ஆண்டுகளில் 5வது ஆய்வு நடத்தி, அதன் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
  • இதில், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.2ல் இருந்து 2.0 ஆக சரிந்துள்ளது. 
  • இது, ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார் என்ற எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படுகிறது.
  • கடந்த 1992-93 முதல் தற்போது வரை சராசரி கருவுறுதல் விகிதம் 40% சரிந்துள்ளது. இது, 3.4ல் இருந்து 2.0 ஆக குறைந்துள்ளது.
  • இதே போல அனைத்து சமூகங்களிலும் பெண்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
  • அதிகபட்சமாக முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதம் 4வது ஆய்வைக் காட்டிலும் 9.9 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது, 2.62ல் இருந்த இந்த எண்ணிக்கை 2.36 ஆக குறைந்துள்ளது. ஆனாலும், சராசரி கருவுறுதல் விகிதத்தில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் தொடர்ந்து முதல் இடத்திலேயே உள்ளனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 
  • கடந்த 1992-93ல் இருந்து முஸ்லிம்களின் சராசரி கருவுறுதல் விகிதம் 46.5 சதவீதமும், இந்துக்கள் விகிதம் 41.2 சதவீதமாகவும் குறைந்து முதல் 2 இடத்தில் உள்ளனர். 
  • கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் 3வது இடத்தில் உள்ளனர். சராசரி கருவுறுதல் விகிதம் சரிவானது, பெண்கள் படிப்பறிவை பெறுவதை காட்டுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகம், 5ம் ஆய்வு, 4ம் ஆய்வு, 3ம் ஆய்வு, 2ம் ஆய்வு, முதல் ஆய்வு, சராசரி விகிதம் (%)
  1. இந்து – 1.94, 2.13, 2.59, 2.78, 3.3, -41.2
  2. முஸ்லிம் – 2.36, 2.62, 3.4, 3.59, 4.41, -46.5
  3. கிறிஸ்தவர் – 1.88, 1.99, 2.34, 2.44, 2.87, -34.5
  4. சீக்கியர் – 1.61, 1.58, 1.95, 2.26, 2.43, -33.7
  5. இந்தியா – 2.0, 2.2, 2.7, 2.9, 3.4, -41

ENGLISH

  • The National Family Health Survey has been conducted since 1992-93 to formulate planning policies for the country.
  • While the 4th study was conducted in 2015-16, the 5th survey was conducted in the last 2 years between 2019-21 and its report is currently being released. Of this, the country’s overall fertility rate has fallen from 2.2 to 2.0.
  • It is calculated by counting the number of children a woman has on average. The average fertility rate has fallen by 40% since 1992-93. This is down from 3.4 to 2.0.
  • Similarly, the number of children born to women in all communities has declined. The maximum fertility rate for Muslim women is 9.9 percent lower than in the 4th study.
  • That is, the figure dropped to 2.36 from 2.62. However, the study found that Muslims continue to have the highest average fertility rate in the world.
  • Since 1992-93, the average fertility rate for Muslims has dropped to 46.5 percent and for Hindus to 41.2 percent. Christians and Sikhs are in 3rd place. The average fertility rate is declining, indicating that women are getting better grades, the report said.
Society, 5th study, 4th study, 3rd study, 2nd study, first study, average ratio (%)
  • Hindu – 1.94, 2.13, 2.59, 2.78, 3.3, -41.2
  • Muslim – 2.36, 2.62, 3.4, 3.59, 4.41, -46.5
  • Christian – 1.88, 1.99, 2.34, 2.44, 2.87, -34.5
  • Sikhs – 1.61, 1.58, 1.95, 2.26, 2.43, -33.7
  • India – 2.0, 2.2, 2.7, 2.9, 3.4, -41

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகம் / NON MALNOURISHED TAMILNADU

TAMIL

  • இரண்டாவது திட்டமானது, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தில் கிடைத்த தகவல் மிக மிக மன வேதனையைத் தருவதாக இருக்கிறது. 
  • தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள். 
  • வயதுக்கேற்ற எடையும் இல்லை; வயதுக்கேற்ற உயரமும் இல்லை. மிக, மிக, மெலிந்து இருக்கின்றார்கள்.
  • உடலில் உறுதி இல்லாவிட்டால் அவர்களது எதிர்காலம் என்பது கேள்விக்குறியாக ஆகிவிடும் என்பதை உணர்ந்து இதற்கென தனியாக ஒரு திட்டத்தைத் தீட்ட நான் ஆலோசனை கூறினேன்.
  • 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம். 
  • மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
  • இத்திட்டத்தின்கீழ், குழந்தைகள் பயனடைவார்கள். தமிழகக் குழந்தைகள் அனைவரையும் திடமான, ஊட்டச்சத்துக் குறைபாடில்லாதவர்களாக மாற்றுவதற்கான திட்டமாக இதனை நாம் வடிவமைத்துள்ளோம்.

ENGLISH

  • The second project is aimed at creating a nutrition-free Tamil Nadu. The information obtained from a statistic taken after coming to power is very, very distressing.
  • Most of the children under the age of 6 in Tamil Nadu tested were malnourished.
  • There is no age-appropriate weight; No age-appropriate height. They are very, very, very thin. Realizing that their future would be in question if the body was not sure, I advised them to devise a plan for this alone.
  • The program was launched with the aim of raising children under the age of 6 in good health. We have a wide range of clinical trials for children.
  • The government has decided to provide medical assistance to children in need of medical assistance and a special nutrition program for children in need of nutrition.
  • Under the scheme, children will benefit. We have designed this as a project to make all Tamil Nadu children solid and malnourished.