MAHILA SAMMAN SAVING SCHEME: பெண்களுக்கான புது சேமிப்பு திட்டம்

0
616
mahila samman saving scheme

mahila samman saving scheme

MAHILA SAMMAN SAVING SCHEME: பெண்களுக்கான புது சேமிப்பு திட்டம்: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் திட்டம் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் 2-வது பதவிக் காலத்தின் கடைசி முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்,.1 தாக்கல் செய்தார்.

இம்முறை பட்ஜெட்டில் பெண்களுக்காக பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் பட்ஜெட்டில் பெண்களை சேமிக்க ஊக்குவிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அரசு புது திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, மகிளா சம்மன் சேமிப்புக் திட்டத்தின் கீழ் 7.5% வட்டி வழங்கப்படும். அதோடு இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வரிவிலக்கு பலன் அளிக்கப்படும்.

இந்த திட்டத்தில் 2 வருடங்களுக்கு ஒரு பெண் (அ) சிறுமியின் பெயரில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். மேலும் பகுதியளவு முதலீட்டை திரும்ப பெறுவதற்கான விருப்பமும் இருக்கிறது.