டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமா? கட் ஆஃப் குறையுமா? - தேர்வர்கள் கோரிக்கை

குரூப் 4 தேர்வு 2022ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்றும், காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, சமூக ஊடகங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ட்விட்டர் தளத்தில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலானது.

சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், 15 ஆயிரம் என்பது மேலும் அதிகமாகியுள்ளதாலும் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.  அரசு பணியே உயிர் என்று தன் உயிர் மூச்சாக கொரோனா பெருந்தொற்று காலத்தை கடந்தும் இதையே நம்பி காத்துக்கொண்டு இருக்கும் எங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.