TAMILNADU BUDGET 2023 - 2024: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2023 - 2024

திருக்குறளை வாசித்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி" என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.223 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு 3959 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். சென்னை கிண்டியில் கருணாநிதி பெயரில் இந்த ஆண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும். மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கான கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும். வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும். ரூ.120 கோடி செலவலி சென்னை அம்பத்தூரில் உலகளாவிய தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும். மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

வருவாய் பற்றாக்குறை ரூ.68,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.  ஒட்டுமொத்த வருவாய் மதிப்பில் வரு வருவாய் 5.58% குறைந்ததே வருவாய் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கடந்த 2 ஆண்டுகளில் அரசு எடுத்த முயற்சி காரணமாக ஜிடிபியில் 6.9% வரி வருவாய் உயர்ந்துள்ளன எனவும் குறிப்பிட்டார்.