தமிழ்நாடு பட்ஜெட் 2023 - 2024 / TAMIL NADU 2023 - 2024

குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது தான், பொதுமக்களிடையே பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு இந்த அளவிற்கு அதிகரிக்க காரணமாக உள்ளது

அதில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டம், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் அரசு வெளியிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு, நெல் கொள்முதல் விலை, மின்சார கட்டணம், புதிய பாடத்திட்டம், கேஸ் மானியம் என பல்வேறு எதிர்பார்ப்புகளும் பொதுமக்களிடையே நிலவுகிறது.

அதோடு, நெல் கொள்முதல் விலை, மின்சார கட்டணம், புதிய பாடத்திட்டம், கேஸ் மானியம் என பல்வேறு எதிர்பார்ப்புகளும் பொதுமக்களிடையே நிலவுகிறது.