நட்ஸ் பற்றிய பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். அதனுடைய நன்மைகளை, மருத்துவ பயன்களை எல்லாம் கேட்டிருப்போம்.  அதில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் ப்ரோட்டீன் இருக்கிறது.  இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்கு தேவையான பல சத்துக்களை கொண்டவை தான். அந்த வகையில் எல்லோரும் உண்ணக்கூடிய பாதாம் பருப்பில் (Almonds) எண்ணிலடங்கா பலசத்துக்கள் உள்ளன.  பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாம் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடியது இந்த பாதாம் (Almonds).  இந்த பாதாம் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம்.

பாதாமில் உள்ள சத்துக்கள்

கலோரிகள் - 163 கிராம் நார்ச்சத்து - 3.5 கிராம் புரதம் - 6 கிராம் கார்ப்ஸ் - 2.5 கிராம் கொழுப்பு - 14 கிராம்

பாதாம் பருப்பின் நன்மைகள் 

இரத்தம் சோகை சருமம் உடலுக்கு வலு இதய ஆரோக்கியம் மலச்சிக்கல்

பாதாம் பருப்பின் மருத்துவ குணங்கள்

தலைமுடி மற்றும் கர்பத்திற்கும் பலன் தரும் மூளையை பலப்படுத்தும் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறையும் முக சுருக்கங்களை போக்கும்