பல்லி விழும் பலன்கள் மற்றும் அதன் பரிகாரங்கள் பற்றி

பல்லி என்பது வீடுகளில் சுவர்களில் வாழும் ஒரு வகை உயிரினம் ஆகும். பல்லி கடவுளின் தூதன் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.  பண்டைய காலங்களில் பல்லியை வைத்து படித்து வந்த படிப்பு கௌரி சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது.

தலையில் பல்லி விழுந்தால் பல்லி விழும் பலன்  பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சகுணத்தை குறிக்கின்றது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களிடம் இருந்து அதிகமான எதிர்ப்பு உண்டாகும். மன நிம்மதியை இழக்க நேரிடும். அவர்களின் உறவினருக்கோ அல்லது பழகியவருக்கோ மரணம் ஏற்படலாம்.

நெற்றியில் பல்லி விழுந்தால் நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் நல்ல பெயர், புகழ், கீர்த்தி கிட்டும். வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும்.

தலை முடியில் பல்லி விழுந்தால் பல்லி தலையில் நேரடியாக விழாமல், தலை முடியில் மட்டும் லேசாக உரசி கீழே விழுந்தால் நல்ல செய்திகள் வந்து சேரும். முகத்தில் பல்லி விழுந்தால் முகத்தில் பல்லி விழுந்தால், அவர்கள் வீட்டிற்கு உறவினர்களின் வரவிருப்பதை குறிக்கும்.

புருவம் புருவத்தில் பல்லி விழுந்தால், ராஜயோக பதவி என்னும் உதவி கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். கண்களில் பல்லி விழுந்தால் கண்கள் அல்லது கண்ணங்களின் பல்லி விழுந்தால், ஏதேனும் ஒரு குற்றத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படக் கூடும் என்பது பொருள்.