பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MAYILSAMY

மயில்சாமி கடந்த அக்டோபர் 2, 1965 ஆம் ஆண்டு பிறந்தவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மீது தீவிர ரசிகர். சினிமா மீதான ஆர்வத்தால் சென்னை வந்த அவர் பாக்யராஜின் தாவணிக் கனவுகள் படத்தில் துணை நடிகராக முதன்முதலில் திரையில் தோன்றினார்.

MAYILSAMY

பாண்டியராஜனின் கன்னிராசி படத்தில் மளிகை பொருட்களை கொண்டு வரும் பாத்திரத்தில் வருவார். அபூர்வ சகோதரர்கள், வெற்றிவிழா, மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட கமல் படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார்.

MAYILSAMY

சிறிய வேடங்களில் நடித்துவந்த மயில்சாமிக்கு சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் திருப்புமுனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியை தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

MAYILSAMY

தூள் படத்தில் விவேக்குடன் இவர் நடித்த திருப்பதி லட்டு காமெடி, தலைநகரம் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து இவர் நடித்த காமெடி, திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் டைட்டல் பார்க் காமெடி என இவர் நடித்த பல காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.

MAYILSAMY

இவர் குறித்து விவேக் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில், "எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி அவரை போலவே பிறருக்கு ஓடிச்சென்று உதவும் குணம் கொண்டவர். நாம பார்க்கும்போது மயில்சாமி நல்லவனா இளிச்சவாயனா என தோன்றும். ஷீரடி சாய்பாபா மாதிரி ஒருநாள் பாத்தா பணக்காரனாக இருப்பான், ஒரு நாள் பாத்தா ஏழையாக இருப்பான். நல்ல மனிதன். யாருக்கு தேவைனாலும் உடனே உதவி செய்து விட்டு வெறும் ஆளாக நிற்பான் என்று பேசியிருப்பார்.

MAYILSAMY

மயில்சாமியின் மகன் அருமை நாயகம் என்கிற அன்பு மயில்சாமி. அந்த 60 நாட்கள் என்ற படத்தில் கதாயநகனாக நடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு உருவான இந்தப் படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. மயில்சாமியின் மகன் அன்புவுக்கும் துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது . சிவ பக்தரான மயில்சாமி தனது மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MAYILSAMY