30,000 பணியிடங்கள் நிரப்ப வலியுறுத்தி டிஎன்பிஎஸ்சி  தேர்வர்கள் போராட்டம்

கடந்த 24.7.2022 அன்று ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.21.03.2023 அன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் காலிப்பணியிடங்களை 10,117-ஆக உயர்த்துவதாக அறிக்கை வெளியிட்டது.

ஆண்டுக்கு சுமார் 10,000 பணியிடங்கள் வரை நிரப்பி வந்த TNPSC குரூப்-4 தேர்வு 2022-ல் மூன்று ஆண்டுகளுக்கு (2020,2021,2022) பின்பு நடத்தப்பட்டு 10.117 காலிப்பணியிடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டிருந்தால் 2019 க்கு பிறகு சுமார் 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கலாம். ஆனால் அதில் 1/3 பணியிடங்கள் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை முறையாக கேட்டறியப்பட்டு குறைந்தபட்சம் 15,000 காலி பணியிடங்களை இந்த குரூப்-4 தேர்வுடன் இணைக்கப்பட வேண்டும்

#increasegroup4vacancies என்ற   hasstag உருவாக்கி தேர்வர்கள் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றன